அதிமுக vs பாஜக கூட்டணி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிஞர் அண்ணாவைப் பற்றி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது தமிழ்நாடு அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜகவின் கூட்டணிக் கட்சியான அண்ணா திமுகவே இதற்கு கடும் கண்டம் தெரிவித்திருக்கிறது. அக்கட்சியின் மூத்த தலைவர்களான சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் அண்ணாவைப் பற்றி அண்ணாமலை பேசியதை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என எச்சரித்திருக்கும் நிலையில், அதிமுகவை இப்போது கடுமையாக விமர்சித்திருக்கிறார் அண்ணாமலை.


மேலும் படிக்க | மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த முற்போக்கு சிந்தனையாளர் தந்தை பெரியார்!


அதிமுக தேவையில்லை


இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, " கூட்டணிக்காக அதிமுகவோடு எல்லா விஷயத்திலும் இணக்கமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் பாஜக தனித்தன்மையோடு வளர்ந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக பாஜக 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். யாருக்கும் அடிபணிந்து செல்ல வேண்டிய அவசியம் எனக்கும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கும் அவசியமில்லை. எங்களுக்கும், அதிமுகவும் கொள்கை மாறுபாடுகள் இருக்கும். கூட்டணி தர்மத்திற்காக எல்லா விஷயங்களையும் மறைத்து பேச முடியாது. எதுவாக இருந்தாலும் ஓபனாக பேசுவேன். அதற்கு எதிர்வினைகள் கடுமையாக இருந்தால், எங்களுக்கும் கடுஞ் சொற்கள் பயன்படுத்த தெரியும். 


பாஜகவுக்கு தயவு தேவையில்லை


யாருடைய தயவிலும் பாஜக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தனித்தன்மையோடு நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்போம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் மோடி மத்தியில் ஆட்சி அமைப்பார். எங்களது கொள்கை சனாதன தர்மம். யாருடைய காலில் விழுந்து பாஜக தொண்டர்கள் இங்கில்லை. அடிப்படையில் நாங்கள் சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, அவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் சொல்வதை நாங்களும், நாங்கள் சொல்வதை அவர்களும் ஏற்றுக் கொண்டால் இரண்டு கட்சிகளையும் ஒன்றாக இணைத்துவிட்டு சென்றுவிடலாமே?. கை இருக்கு, மைக் இருக்கு என எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு செல்வதை அனுமதிக்க முடியாது" என சூடாக பதில் அளித்துள்ளார்.


மேலும் படிக்க | அரசு பள்ளிகளில் தரமற்ற சைக்கிள் வழங்கியதாக புகார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ