கோவில்களில் அன்னதானம் வழங்கிய பாஜக வினோஜ் பி செல்வம்!
தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு பிஜேபியின் மாநில செயலாளர் திரு வினோஜ் பி செல்வம் முக்கிய கோவில்களில் அன்னதான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்.
தைப்பூச தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பிஜேபியின் மாநில செயலாளர் திரு வினோஜ் பி செல்வம் அவர்களது சார்பாக கடந்த 25-01-2024 அன்று சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி எல்டாம்ஸ் சாலையில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பூங்காநகரில் அமைந்துள்ள கந்தகோட்டம் திருக்கோவில், திருவல்லிக்கேணியில் உள்ள எட்டாம்படை வீடு ஸ்ரீ முருகன் திருக்கோவில், வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், அமைந்தகரையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், அண்ணாநகரில் உள்ள ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்களில் நடைபெற்றது.
அன்னதான நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்ச்சியின் போது கோவில்களில் சிறப்பு பிரச்சாரம் நடைபெற்றதுடன் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த பாஜகவின் பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பிஜேபியின் மாநில செயலாளர் திரு வினோஜ் பி செல்வம் பாராட்டுகளை தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ