கன்னியாகுமரி: முதல்முறையாக இரணியல் பேரூராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2 சுயேட்சைகளும், ஒரு நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். அங்கு போட்டியிட திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 55 பேரூராட்சிகளுக்கு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.


உள்ளாட்சி தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்கு சாதகமான முடிவுகள் அனேகமாக இருக்கும். அதாவது ஆளும் கட்சி தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவது வழக்கம். இதற்கு முன் நடைபெற்ற பல தேர்தலின் முடிவுகள் அதை தான் உணர்த்துகின்றன. 


மேலும் படிக்க: சுயேச்சைகளின் கையில் கமுதி பேரூராட்சி 15ல் 14 வார்டுகளில் வெற்றி


அதேநேரத்தில் சில இடங்களில் ஆளும் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலையும் ஏற்படுவது உண்டு.  அந்தவரிசையில் கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பேரூராட்சியின் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12ல் பாஜக வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியது. மீதமுள்ள மூன்று வார்டுகளில் 2 சுயேட்சைகளும், ஒரு நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டத்தின் நிலவரம்:


மாநகராட்சி (1): 
நாகர்கோயில்


நகராட்சி (4):
குழித்துறை
குளச்சல்
பத்மனாபபுரம்
கொல்லங்கோடு


பேரூராட்சி (55): 
இரணியல், அகத்தீஸ்வரம், இடைக்கோடு, அழகியபாண்டியபுரம், கடையால், தென்தாமரைக்குளம், கல்லுக்கூட்டம், கீழ்க்குளம், குலசேகரபுரம், வெள்ளிமலை என மொத்தம் 55 பேரூராட்சிகள் உள்ளன.


மேலும் படிக்க: Coimbatore Corporation: கோவை மாவட்ட தேர்தல் முடிவுகள் - திமுக ஆதிக்கம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR