பாஜக, நாம் தமிழர் கட்சி இடையே மோதல் முற்றத் தொடங்கியுள்ளது. உட்சபட்சமாக நாதக என்ற கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இருக்கவே இருக்காது என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதன் பின்னணி என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம். இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளிடம் இருந்து பணம் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டில் என்ஐஏ, நாதக கட்சியினர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தியது. இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு சீமான் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Saidai Duraisamy Son: சைதை துரைசாமி மகன் மாயம்...? சட்லஜ் ஆற்றில் விழுந்த கார் - விபத்து ஏற்பட்டது எப்படி?


இந்திய சட்டவிதிகளுக்கு உட்பட்டு நாதக செயல்படுவதாகவும், தங்கள் கட்சியினர் தேசத்துக்கு எதிராக எந்தவித சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும், வேண்டுமென்றே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாம் தமிழர் கட்சியை முடக்க பாஜக செயல்படுவதாகவும் விமர்சித்தார். மேலும், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்குகளே இல்லை என தெரிவித்த சீமான், நாம் தமிழர் கட்சியை விட ஒரு விழுக்காடு வாக்குகளை கூடுதலாக பாஜகவால் பெற்று காட்ட முடியுமா? என்றும் சவால் விடுத்தார். இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, " சீமானின் இந்த சவாலை ஏற்க தயார். ஒரு விழுக்காடு என்ன?, 30 விழுக்காடு வாக்குகளை கூட பெற்றுக் காட்ட முடியும். 



ஆனால், 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாம் தமிழர் என்ற கட்சியே இருக்காது. இளைஞர்களிடம் அக்கட்சி வெறுப்பை விதைக்கிறது. எத்தனை நாளைக்கு வெறுப்பை விதைத்து ஒரு கட்சியை நடத்த முடியும்?. நாம் தமிழர் கட்சியால் என்ன செய்ய முடியும்?, அக்கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கிறதா? இல்லை மாநிலத்தில் தான் ஆட்சிக்கு வரப்போறாங்களா?. கொள்கை இல்லாத கட்சி." என பதிலளித்துள்ளார்.


இதற்கு சீமான் கொடுத்த பதிலில், " நாம் தமிழர் கட்சிக்கு 7% வாக்குகள் இருக்கிறது. எங்களைவிட 30% வாக்குகள் கூடுதலாக பாஜக பெறும் என்கிறார் அண்ணாமலை. அதாவது 37% வாக்குகள் பெற முடியும் என்றால் அண்ணா திமுகவுடன் பாஜகவுக்கு கூட்டணி தேவை இல்லையே? 37% பெற முடியும் என்றால் தனித்து நின்றே ஆட்சி அமைக்கலாமே எதற்கு கூட்டணி? வெறுப்பின் விதை வேர், செடி, பூ, காய் அத்தனையுமே பாஜகதான். நாம் தமிழர் அல்ல. நான் முன்வைக்கும் மொழி, இன அரசியல் வெறுப்பு எனில் ஏன் மொழி வழி மாநிலங்களை பிரித்தீர்கள்? எல்லா நாடுகளிலும் மொழிவழி தேசிய இனங்கள்தான். 2024 தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறும். அதன் பிறகு யார் இருப்பார்கள்? என பார்ப்போம்" என கூறினார்.


மேலும் படிக்க | தனிச் சின்னம் என்கிற கேள்விக்கு இடமில்லை: மதுரையில் ஓபிஎஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ