பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு
அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதியானது.
சென்னை: பாஜக மாநிலத் துணைத் தலைவரும் அரவக்குறிச்சி வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் களத்தில் அமைதி திரும்புவதற்குள் மறுபுறம் மாநிலத்தில் கொரோனா(Coronavirus) பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழக அரசு (Tamil Nadu Government) பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மெரினா (Marina Beach) உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் அனைத்து வழிபாட்டு தலங்கள் அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி இரவு 10 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை!
இந்நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவரும் அரவக்குறிச்சி வேட்பாளருமான அண்ணாமலைக்கு (Annamalai) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR