Tamil Nadu Latest News Updates: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
Tamil Nadu Latest News: தமிழக பாஜக தலைவராக செயல்பட அண்ணாமலைக்கு தகுதியில்லை என்றும் அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி உள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அவதூறாகப் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையைச் சாலையில் எரித்து பாஜகவினர் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீண்ட காலமாகவே விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஆதாரமற்ற கருத்துகளைக் கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றவர்களுக்காக 60 ஆண்டுகளுக்கு முன்பே எம்ஜிஆர் பாடல் பாடி வைத்து சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தது மட்டுமல்லாமல் பாடல் ஒன்றையும் பாடி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும் என்றும், வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்றும் அண்ணாமலைக்கு தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புரட்சித்தலைவர் கட்சி காலை முதல் இரவு வரை என்னை வசைபாடுவதை பெருமையாக நினைப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மரியாதை செலுத்தியதால் கள்ள உறவு என சொல்வது பக்குவப் பட்ட அரசியல்வாதி சொல்லும் வார்த்தையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பை அண்ணாமலை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட அமைச்சர் துரைமுருகன் பேசவில்லை என்பதால் அவர் பணம் வாங்கினாரா என்ற சந்தேகம் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகாவை விடத் தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு எம்.பி தொகுதிக்கு இரண்டு நவோதயா பள்ளிகள் துவக்க தமிழக அரசு அனுமதி அளிக்காமல் உள்ளது. நவோதயா என்ற பெயர்தான் பிரச்னை என்றால் கமாராஜர் பள்ளி என பெயர் வைத்து விடலாம் - அண்ணாமலை.
Annamalai, kalyanaraman bjp : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாகவும், கோவை கார் குண்டு வெடிப்புக்கு மூலக் காரணமே அவர் தான் என்றும் முன்னாள் பாஜக நிர்வாகி கல்யாண ராமன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கடும் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.