மதுரை: கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், சில வாரங்களாக கருப்பு பூஞ்சை நோய் புதிதாக தன் ஆட்டத்தைத் துவக்கியுள்ளது. பெரும்பாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை பாதிக்கும் இந்த நோயால் சமீபத்தில் அதிக அளவிலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதானமாக மகாராஷ்டிரா, பீகார், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகமாக காணப்பட்ட கருப்பு பூஞ்சை நோய், இப்போது பிற மாநிலங்களிலும் பரவி வருகிறது. தற்போது தென் மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு (Tamil Nadu) ஆகிய இடங்களிலும் மத்திய பிரதேசத்திலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய செய்தி வந்துள்ளன. 


இந்த நிலையில், தமிழகத்தின் மதுரையில், இதுவரை சுமார் 50 பேர் கருப்பு பூஞ்சை (Black Fungus) நோயால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி தெரியவந்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை தரப்பில் இந்த செய்தி அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 50 பேரில் எத்தனை பேர் சர்க்கரை நோயாளிகள் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வரவில்லை. எனினும், துவக்க நிலையிலேயே மதுரையில் 50 பேருக்கு இந்த நோய் இருப்பது தெரிய வந்திருப்பதால், அங்கு மக்களும் நிர்வாகமும் பிதியில் உள்ளனர்.


சென்னையிலும் 9 பேருக்கு கருப்பூ பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும்  இதில் 7 பேர் சர்க்கரை நோயாளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நோயால் கண், காது, மூக்கு தொண்டை பகுதிகள் பாதிக்கப்படுவதால், இவர்களில் சிலர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை நடந்து வருகிறது. இது தவிர, சென்னையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ALSO READ: தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு


பொதுவாக, கருப்பு பூஞ்சைக்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் அதற்கான சிகிச்சை எடுத்தால், இந்த நோயை சரி செய்து விடலாம். எனினும், சிகிச்சை தாமதிக்கப்பட்டால், இதனால், கண் பார்வை இழப்பு, உயிர் இழப்பு போன்ற அபாயங்களும் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


மியுகோர்மைகாசில் (Mucormycosis) அதாவது கருப்பு பூஞ்சை என்பது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் ஒரு பூஞ்சை தொற்றாகும். இது சமீப காலங்களில் உருப்பு மாற்றுக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் ஐ.சி.யுகளில் தீவிர நிலையில் உள்ள நோயாளிகளின் நோய் மற்றும் இறப்புக்கு ஒரு காரணியாக இருந்து வருகிறது. இது ஜைகோமைகோசிஸ் (Zygomycosis) என்றும் அழைக்கப்படுகிறது.


இந்த பூஞ்சை தொற்று மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும்போது அவர்களை பாதிக்கிறது. இந்த தொற்று நுரையீரல் மற்றும் சைனஸை பாதிக்கிறது. திறந்த காயங்கள் அல்லது வெட்டுக்கள் மூலமாகவும் இந்த பூஞ்சை உடலில் நுழைகிறது. 


கட்டுக்கடங்காத நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் நீண்டகாலமாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) தங்கியிருக்கும் COVID-19 நோயாளிகளில் காணப்படும் மியூகோமைகோசிஸ் அல்லது 'கருப்பு பூஞ்சை' தொற்று, கவனிக்கப்படாவிட்டால் ஆபத்தானதாக மாறக்கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்த பூஞ்சை தொற்று முக்கியமாக பல வித நோய்களுக்கான மருந்துகளை உட்கொண்டு வருபவர்களை பாதிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த பூஞ்சை சுற்றுச்சூழல் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் அவர்களது திறனைக் குறைத்து அவர்களது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்றும் சுகாதார நிபுணர்கள் மேலும் தெரிவித்தனர்.


ALSO READ: அதிகரிக்கும் Mucormycosis நோயாளிகள்: 50% இறப்பு விகிதத்துடன் தயாராகிறது அடுத்த நோய்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR