தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு

தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : May 20, 2021, 01:06 PM IST
தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் உச்சமடைந்துள்ள நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் 34,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் கொரோனாவிலிருந்து (Coronavirus) மீண்டு வருபவர்களை கருப்பு பூஞ்சை (Black Fungus) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் காரணமாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்பலிகளும் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் 9 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கோவில்பட்டியில் ஒருவர் கொரோனாவில் இருந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

ALSO READ: Mucormycosis: யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்? தற்காப்பாக எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது?

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, கருப்பு பூஞ்சை பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை, தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படவேண்டும். கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது. இதில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உண்டாகியுள்ளது என்று கூறினார். 

கருப்பு பூஞ்சை என்றால் என்ன?
கருப்பு பூஞ்சை என்பது ஒரு பூஞ்சை தொற்று ஆகும். இது கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக உடலில் ஏற்படுகின்றது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கருத்துப்படி, கருப்பு பூஞ்சை என்பது உடலில் மிக வேகமாக பரவுகின்ற ஒரு அரிய நோயாகும். மேலும் இது கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கு முன்பு வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் காணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக உள்ளவர்களையும் இது அதிகமாக பாதிக்கிறது. 

எந்த நபர்களுக்கு இந்த நோய்க்கான ஆபத்து அதிகம்?
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தனது ட்வீட் மூலம், யாருக்கெல்லாம் கருப்பு பூஞ்சை வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது என்பதை தெரிவித்தார். ஹர்ஷ் வர்தனின் கூற்றுப்படி, நீரிழிவு நோய்  (Sugar Level) உள்ளவர்கள் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் (Sugar Level) கட்டுப்படுத்தாதவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்கள், ஸ்டெராய்டுகளை உட்கொள்ளும் நபர்கள், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நீண்ட காலமாக ஐ.சி.யு, மருத்துவமனைகளில் இருந்தவர்கள், உறுப்பு மாற்று மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், மிகவும் கடுமையான பூஞ்சை தொற்று ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கு கருப்பு பூஞ்சைக்கான  அதிக ஆபத்து உள்ளது.

ALSO READ: அதிகரிக்கும் Mucormycosis நோயாளிகள்: 50% இறப்பு விகிதத்துடன் தயாராகிறது அடுத்த நோய்!!

கருப்பு பூஞ்சையின் அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள்
கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள் சரியான நேரத்தில் கவனிக்கப்பட்டால், நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும்:
- கண்களில் அல்லது கண்களைச் சுற்றி சிவப்பாக இருப்பது அல்லது வலி இருப்பது
- அடிக்கடி காய்ச்சல்
- தலையில் கடுமையான வலி
- சுவாசம் மற்றும் மூச்சுத் திணறல்
- இரத்த வாந்தி
- மன நிலையில் மாற்றம் 

கருப்பு பூஞ்சையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்
நோயாளி ஹைப்பர் கிளைசீமியாவைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அதாவது நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். கோவிட் -19 ல் இருந்து மீண்டு, மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர், வீட்டிற்கு வந்த பிறகும் இரத்த குளுக்கோஸ் அளவை குளுக்கோமீட்டரின் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். ஸ்டெராய்டுகளை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மருந்துகளுக்கான சரியான அளவுகள் மற்றும் நேர இடைவெளிகளை அறிய வேண்டும். மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். 

கருப்பு பூஞ்சையை தவிர்க்க என்ன செய்யக்கூடாது
நோயின் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். மூக்கு அடைபட்டால், அது சைனஸ் பிரச்சனை தான் என எண்ணி அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். குறிப்பாக கோவிட் -19 நோயாளிகள் மூக்கடைப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு சந்தேகம் வந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முகோர்மைகாசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டால் நோயாளி இறக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில், அறிகுறிகளைக் கண்டறிந்த பிறகு சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது மிகவும் முக்கியம்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News