சனி - செவ்வாய் தாக்கத்தில் இருந்து உங்களை காக்கும் நீலக்கல் ரத்தினம்!
ரத்தினக் கற்களின் பலன்களால் கிரகங்களின் தாக்கம் தோஷம் குறைகிறது. ரத்தின சாஸ்திரத்தின்படி, சனி மற்றும் செவ்வாய் கிரகத்தை மகிழ்விக்க நீலமணி அணிவது நல்ல பலன் கொடுக்கும் என கூறப்படுகிறது.
புதுடெல்லி: ஜோதிடத்தில், கிரகங்களின் சுப பலன்களுக்கு பல வகையான ரத்தினங்கள் கூறப்பட்டுள்ளன. ஜாதகத்திற்கு பொருத்தமான ரத்தினம், உங்களுக்கு உள்ள கஷ்ட காலத்தை போக்கி அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். அதனால்தான் சரியான நேரத்தில் சரியான ரத்தினத்தை அணிய வேண்டும் என்று ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் சுப பலன்களுக்காக நீலக்கல் அணியப்படுகிறது. இரண்டு கிரகங்களின் அசுப பலன்களும் இந்தக் கல் அணிவதால் பெரிதும் குறையும். நீலக்கல்லை அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதை அணியும் சரியான முறை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நீலக்கல் கிரகங்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்கிறது. இந்த ரத்தினத்தை ஜாதக ரீதியாக பொருந்தி அணியும், அந்த நபர் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறார். அசுப பலன் காரணமாக, வாழ்க்கையில் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படும் நிலை உண்டாகும் போது, அதனை பெரிய அளவில் குறைக்கின்றன.
ALSO READ | இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க
நீலக்கல் ரத்தினத்தை யார் அணிய வேண்டும்
ஜோதிட நிபுணர்கள் மேஷம் மற்றும் மகர ராசிக்காரர்களை அணிய பரிந்துரைக்கின்றனர். ஜாதகத்தில் சனி மற்றும் செவ்வாய் திசை இருக்கும்போது, இந்த ரத்தினம் நன்மை பயக்கும். இதுதவிர ரிஷபம் லக்னம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் நீலக்கல் அணிவது சுபயோகம். மேலும், ஒருவரின் ஜாதகம் கும்பம் லக்னம் அல்லது மேஷ லக்னம் மற்றும் மேஷ ராசியில் இருந்தால், நீலமணியை அணிய வேண்டும்.
நீலக்கல்லை அணியும் முறை
பஞ்ச லோகத்தில் பதித்த நீலமணியை அணிவது மங்களகரமானது. இந்த ரத்தினத்தை வலது கையில் அணிய வேண்டும். எனினும், வலது கையால் வேலை செய்பவர் வலது கையிலும், இடது கை பழக்கம் உள்ளவர் இடது கையிலும் அணிய வேண்டும். இது தவிர, சனிக்கிழமை இந்த ரத்தினத்தை அணிவதற்கு உகந்தது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR