புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார். புதுச்சேரியில் தமிழக பாடதிட்டம் பின்பற்றப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டின் பல மாநிலங்களிலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி-யும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக சென்ற வாரம் அறிவித்தது.
தற்போது புதுச்சேரியிலும் (Puducherry) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார்.
முன்னதாக, கொரோனா தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சனிக்கிழமையன்று தமிழக அரசு அறிவித்தது.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பொதுத் தேர்வுகளை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற பெரிய குழப்பம் நிலவி வந்த நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி சென்ற வாரம் அறிவித்தார். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வந்தவுடன், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற பல மாநிலங்கள் பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தன.
தமிழகத்தைப் (Tamil Nadu) பொறுத்த வரையில், சிபிஎஸ்இ எடுக்கும் முடிவுக்குப் பிறகு தமிழகத்தின் நிலைப்பாடு பற்றி தெரிவிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவிப்பு வந்தவுடன் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி மேலோங்கி இருந்தது.
ALSO READ: Puducherry: நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இதைத் தொடர்ந்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடன் பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பல கட்ட ஆலோசனைகளை நடத்தினார். பின்னர் இறுதியாக முதல்வருடன் இது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதகற்குப் பிறகு மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரியிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார். புதுச்சேரியில் தமிழக பாடதிட்டம் பின்பற்றப்படுகிறது. தற்போது தமிழகத்தில் பொதுத்தேர்வு (Board Exams) ரத்து செய்யப்பட்டிருப்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மதிப்பெண்கள் எந்த முறையில் அளிக்கப்படும் என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ALSO READ: புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா- ஆளுநர் தமிழிசை பதில்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR