புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா- ஆளுநர் தமிழிசை பதில்

இறப்பு விகிதம் குறைந்தால் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 2, 2021, 05:45 AM IST
  • இறப்பு விகிதம் குறைந்தால் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பில்லை
  • புதுச்சேரியில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு
  • தெருமுனையில் தடுப்பூசி திட்டம் என்ற புதிய நடைமுறை
புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா- ஆளுநர் தமிழிசை பதில் title=

கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதில் இருந்து, தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த 11 தினங்களாக குறைந்து வருவது சிறிது நிம்மதி அளிக்கும் விஷயமாக உள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு செய்யபட்டு வருகிறது.

அதன்படி, புதுச்சேரியில் (Puducherry) தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு (Lockdown) உள்ளது என்றும் வரும் நாட்களில் நோய்த்தொற்று மற்றும் இறப்பு விகிதம் குறைந்தால் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் (Tamilisai Soundararajan) தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் சுகாதாரத்துறைக்கு காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கவச உடை, முக கவசம் உள்ளிட்டவைகளை சுகாதாரத்துறைக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.,

ALSO READ | புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 நிவாரணம்

தெருமுனையில் தடுப்பூசி திட்டம் என்ற புதிய நடைமுறையை தொடங்கி உள்ளோம். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி 1.4 லட்சம் கையிருப்பில் உள்ளது. இளைஞர்களுக்கான தடுப்பூசி கையிருப்பில் உள்ள சூழலில் மேலும் 33 ஆயிரம் தடுப்பூசிகள் ஆர்டர் தந்துள்ளோம்.

4 தினங்களில் கொரோனா தாக்கும் குறைந்தால் மேற்கொண்டு கடைகள் திறந்து இருக்கும் நேரத்தை அதிகரித்து தளர்வுகள் அளிக்கப்படும். மக்களுக்கு ரூ.3ஆயிரம் நிவாரணமாக வழங்குவதற்கான கோப்பிற்கு எந்த தயக்கமும் இன்றி ஒப்புதல் அளிக்கப்படுள்ளது.  இன்னும் 3 நாட்களுக்கு சூழலைப் பார்த்து 7-ம் தேதிக்கு பிறகான நிலையை முடிவு செய்வோம். தடுப்பூசி போட்டுக்கொண்டு, முகக்கவசம் அணிந்து பொருளாதார சவாலை சந்திக்க வேண்டும். 

இக்காலக்கட்டம் சவாலாக இருந்தாலும் எச்சரிக்கையாக பணியாற்றி, துணிச்சலாக கடக்க வேண்டும் என தெரிவித்தார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News