சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
![சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/07/06/132647-004.jpg?itok=67c31BuX)
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கடற்கரை சாலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது பாதுகாப்பு மிகுந்த இந்த அலுவலத்திற்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று மிரட்டல் வந்துள்ளது.
தொலைபேசியில் பேசிய மர்மநபர், வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.இந்நிலையில் டிஜிபி அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்தாக சேலத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.