திருநின்றவூர் காந்தி சிலை அருகில் செயல்பட்டு வருகிறது தனியார் மருத்துவமனை கிளினிக். அங்கு சிகிச்சைக்காக வந்த இரண்டு பெண்களின் நடவடிக்கை மருத்துவமனை ஊழியர்களுக்கு பெரும் சந்தேகத்தை வரவழைத்திருக்கிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுப்பதற்குள் அவர்கள் இருவரும் காணாமல் போயிருக்கிறார். இதற்கிடையே, மருத்துவமனையின் கழிப்பறைக்கு ஊழியர் ஒருவர் சென்றிருக்கிறார். பேரதிர்ச்சி..! கழிப்பறையின் ஓட்டையில் ஆண் சிசு ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சியில் உறைந்துபோன ஊழியர் கழிப்பறையில் இருந்து வெளியே ஓடி வந்து சக ஊழியரிடம் அதுகுறித்து தெரியப்படுத்தியிருக்கிறார். உடனே திருநின்றவூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் ஆண் சிசுவை கழிவறையிலிருந்து எடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அடையாளம் தெரியாத அந்த இரண்டு பெண்கள் யார் என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். மேலும் கழிவறையில் வீசப்பட்ட 173 கிராம் சிசு கருக்கலைப்பா அல்லது எதேச்சையாக நடந்த விபத்தா என்கிற கோணத்தில் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



மேலும் படிக்க | தோட்ட காவலாளி வெட்டிக் கொலை - சக ஊழியரின் வெறிச்செயல்..!


இந்நிலையில் மருத்துவமனை கழிவறையில் பிறந்து சில மணி நேரம் ஆன ஆண் சிசு இறந்து கிடந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR