ஹோட்டல் தந்தூரி சிக்கனால் சிக்கல்; அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஹோட்டலில் வாங்கிய தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுவன் உடல்நல குறைவால் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கச்சிப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் மதன்ராஜ். இவர் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந் நிலையில் இவரும் இவர் மனைவி ரேகாவும் கடந்த வியாழக்கிழமை அன்று பட்டு நூல் சத்திரம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தந்தூரி சிக்கனை வீட்டுக்கு வாங்கி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தந்தூரி சிக்கனை மதன்குமார் மற்றும் அவருடைய மகன் சச்சின்(11) ஆகிய இருவர் மட்டும் சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த நாளான கடந்த வெள்ளிக்கிழமையன்று காலையில் இருந்து மதன்ராஜிற்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. மேலும் காலையில் பள்ளிக்குச் சென்ற சச்சின் பள்ளியிலே வாந்தி பேதியுடன் மயக்கம் அடைந்துள்ளான்.இது குறித்து உடனே பள்ளி தலைமை ஆசிரியர் சச்சின் அம்மா ரேகாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் சச்சினின் அம்மா ரேகா உடல் குறைவால் அவதியுற்ற தனது மகன் சச்சினையை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை அன்று அனுமதிக்கப்பட்ட சச்சின் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
மேலும் சச்சின் அப்பா மதன்ராஜ் தற்போது வரை வாந்தி பேதியினால் அவதிப்பட்டு வருவதாகவும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி ரேகா கூறுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட ஹோட்டலை ஆய்வு செய்து அங்கு பயன்படுத்துகின்ற உணவுகள் கலப்பட உணவா? அல்லது காலாவதியான உணவா? என கண்டுபிடித்து ஏதேனும் உயிர்சேதம் போன்ற அசாம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் படிக்க: இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி - அன்புமணி ராமதாஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR