இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி - அன்புமணி ராமதாஸ்

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 11, 2022, 03:58 PM IST
  • தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
  • இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி என கருத்து
இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி - அன்புமணி ராமதாஸ் title=

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இதுபற்றி கேட்ட போது, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் பள்ளிகள் அளவில், பள்ளி மேலாண்மை குழுவால் மேற்கொள்ளப்பட இருப்பதால், அதில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று விளக்கம் கிடைத்திருக்கிறது.

மேலும் படிக்க | எவ்வளவு தெரியுமா கஷ்டப்பட்டேன் - புரட்சித் தலைமகன் பழனிசாமி புலம்பல்

இந்த விளக்கத்தை ஏற்கவே முடியாது. நியமன நடைமுறைகளை காரணம் காட்டி இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது என்று பள்ளிக்கல்வித் துறையே கூறுவது தமிழ்நாட்டில் காலம் காலமாக கடை பிடிக்கப்பட்டு வரும் சமூக நீதிக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இந்த சமூக அநீதியை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. 

தமிழக அரசு கல்லூரிகளில் 5,584 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்ட போதும் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வில்லை. ஆசிரியர்கள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றால், அதனால் சமூக நீதிக்கு ஏற்படும் பின்னடைவை சரி செய்ய முடியாமல் போய்விடும். 

மேலும் படிக்க | 145 தடை : ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கத்திகுத்தும் போலீசாரின் மண்டை உடைப்பும்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப் படக்கூடாது. காலமுறை ஊதிய அடிப்படையில் தான் நியமிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தவிர்க்க முடியாமல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால், அதில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். இதை தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக முதல்-அமைச்சர் அறிவிப்பது தான் குழப்பங்களைத் தீர்க்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அதிமுக பொதுச்செயலாளர் பதவி - தேர்தல் நடத்தும் அதிகாரியாக விசுவநாதன், ஜெயராமன் நியமனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News