ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே சாலையில் ஓட ஓட விரட்டிச் சென்று அடையாளம் தெரியாத நபர்களால் 22 வயது இளைஞர் முகம் சிதைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரம் (Kanchipuram) மாவட்டம்,  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நாட்டரசன்பட்டு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் என்பவர். இவரின் மகன் ஜெயராமன் ஆவார். இவருக்கு வயது 22 ஆகும். இவர் தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 


ALSO READ அரசுக்கு முன் கையை கட்டிக்கொண்டு இருப்பேன் என நினைக்க வேண்டாம்: எச்சரிக்கும் பாஜக எம்பி


இந்நிலையில் பணி முடித்து விட்டு ஒரகடம் அருகே பனப்பாக்கம் தனியார் கல்லூரி அருகே இறங்கி உள்ளார். அங்கு அவர் மினி பேருந்தில் வீடு செல்ல காத்திருந்தார். அப்போது தீடிரென அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் ஜெயராமனை தாக்க முயற்சித்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். மர்ம நபர்கள் தொடர்ந்து ஜெயராமனை விரட்டிச்சென்று வெட்டி படுகொலை செய்தனர். ஆத்திரம் அடங்காத அந்த கொலைவெறி கும்பல் ஜெயராமனின் முகத்தை சிதைத்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடியது. 


இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஒரகடம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வெட்டப்பட்டு கிடந்த ஜெயராமனை பரிசோதித்த போது இறந்த நிலையில் இருந்துள்ளார். பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துனர். மேலும், தற்போது இது குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை குறித்து காவல்துறை தேடி வருகின்றனர்.


கொலை செய்யப்பட்ட ஜெயராமன் மீது மணிமங்கலம் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ |  14 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR