சென்னை : மஜாஜ் பெயரில் பாலியல் தொழில்.. சட்டவிரோத ஸ்பாக்களுக்கு சீல்
சென்னையில் சட்டவிரோதமாக நடைபெறும் ஸ்பாக்களில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து 55 ஸ்பாக்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னையில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி ஸ்பாக்கள் நடைபெற்று வந்தன. அதில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்தன. இதுகுறித்து காவல்துறைக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக புகார்கள் அனுப்பினர். புரோக்கர்கள், தனியாக வீடு எடுத்து வேலை தேடி வரும் பெண்களை குறி வைத்து அவர்களை பாலியல் தொழிலில் தள்ளுவதாக குற்றம்சாட்டப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த ஸ்பாக்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கின. குறிப்பாக அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஸ்பாக்கள் இயங்கி வருவதாகவும் கூறப்பட்டன.
மேலும் படிக்க | விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்
இதனையடுத்து, காவல்துறை ஆக்ஷனில் இறங்கியது. சட்டவிரோதமாக இயங்கிய ஸ்பாக்களுக்கு நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளது. இதில் குறிப்பாக சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களை கடந்த ஒரு மாதத்தில் கண்டறிந்து காவல்துறையினர் சீல் வைத்து மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையான உரிமங்கள் பெறாமல் ஸ்பாக்கள் நடத்தி வருவதாகவும், அதில் மசாஜ் மற்றும் பாலியல் தொழில் நடத்தி வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் நிலையத்தில் உரிய ஆவணம் பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 55 ஸ்பாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மூடி சீல் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கோவை : சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ