'கோகைன்' போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் விஜய், தனுஷ், நடிகை திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்ட திரைப் பிரபலங்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி கைது செய்ய வேண்டுமென உள்துறை செயலாளர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். பிரபல பிண்ணனி பாடகி சுசித்ரா வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் இந்த புகாரை கொடுத்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுசித்ரா பேட்டி


பிரபல பின்னணி பாடகியும், நடிகையுமான சுசித்ரா அண்மைக்காலமாக கொடுத்து வரும் பேட்டிகள் திரை வட்டாரத்தில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அவர் தனுஷ் மற்றும் முன்னாள் கணவர் கார்த்திக் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். அத்துடன் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா மீது குற்றச்சாட்டை வைத்த அவர், நடிகர் கமல்ஹாசன் கொடுத்த சினிமா பார்ட்டிகளில் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். அத்துடன் நடிகர் விஜய் நடத்திய கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப் பொருளான 'கோக்கைன் ' பரிமாறப்பட்டு அவற்றை தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் அருந்தியதாகவும் பின்னணிப் பாடகி சுசித்ரா குற்றம்சாட்டியிருக்கிறார். அவரின் இந்த குற்றச்சாட்டுகள் திரைவட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. 


மேலும் படிக்க | அணை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்! எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்!


சுசித்ரா மீது வழக்கு


இதனைத் தொடர்ந்து நடிகை சுசித்ரா தெரிவித்த குற்றச்சாட்டுகளை அவருடைய முன்னாள் கணவர் கார்த்திக் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்ட அவர், கார்த்தி பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரிக்க புகார் ஒன்றை கொடுத்திருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார். இருப்பினும் நடிகை சுசித்ரா பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு தொடர்ச்சியாக பேட்டிகள் கொடுத்து, பல முன்னணி திரைப்பிரபலங்கள் மீது அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கிறார். 


வீரலட்சுமி புகார்


இந்த சூழலில் தான் தமிழர் முன்னேற்றப்படை  தலைவர் வீரலட்சுமி தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்திருக்கும் புகார் மனுவில் பின்னணி பாடகியும், நடிகையுமான சுசித்ரா தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். புகார் கொடுத்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த வீரலட்சுமி, "கோக்கைன் போதைப் பொருள் பயன்பாடு குறித்து சுசித்ரா கூறியுள்ள நிலையில் நடிகர்கள் விஜய், தனுஷ், நடிகைகள் திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் விஜய் ஏசுதாஸ், கார்த்திக் குமார் ஆகியோரிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், சுசித்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் பட்டியல் சமூகத்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக வெளியான ஆடியோ குறித்தும் விசாணை நடத்தி அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வீரலட்சுமி கூறினார்.


மேலும் படிக்க | அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை - எஸ்பி வேலுமணி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ