தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம் தொடர்பான தகவல் வெளியானது. தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை டிஜிபியாக 1987ஆம் ஆண்டு தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி சைலேந்திர பாபு அவர்கள்நியமிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக டிஜிபி திரிபாதி நாளையுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் இன்று தமிழக அரசு சைலேந்திர பாபுவை புதிய டிஜிபியாக நியமித்துள்ளது. 


தமிழகத்தின் 30வது டிஜிபியாக ஜூலை முதல் தேதியன்று சைலேந்திர பாபு பதவியேற்றுக் கொள்வார். மதுரை வேளாண் ஆராய்ச்சி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவர் சைலேந்திர பாபு. 



இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் கட்டுரைகளை எழுதும் தமிழகத்தின் புதிய டிஜிபி, இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். கடலூர், ராமநாதபுரம் என பல மாவட்டங்களில் பணியற்றியவர்.


லஞ்ச ஒழிப்புத்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை என பல துறைகளில் பணியாற்றிய அனுபவர் மிக்கவர் சைலேந்திர பாபு.


கோயம்புத்தூரில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின்போது சீரிய பணிகளுக்காக பாராட்டுகளை பெற்றவர். இறுதிப் பட்டியலில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நியமனம் நடைபெற்றுள்ளது. 


ஏழு அதிகாரிகள் முதல்நிலை பட்டியலில் இடம்பெற்றனர். அதிலிருந்து மூவர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, இறுதியில் சைலேந்திர பாபு தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கபப்ட்டார். தற்போது 59 வயதாகும் சைலேந்திர பாபு 2023ஆம் ஆண்டு வரை டிஜிபியாக பதவி வகிப்பார்.


Also Read | Breaking News! டிவிட்டர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR