நம்மூர் மக்களின் உணவுப்பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் அசைவ உணவுப்பொருள் சிக்கன். சிக்கனில், நாட்டுக்கோழி சிறந்ததா, பிராய்லர் கோழி சிறந்ததா, போலி முட்டைகளை எப்படிக் கண்டறிவது உள்ளிட்ட ஏகப்பட்ட சந்தேகங்கள் அடிக்கடி எழுப்பட்டுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டுக்கோழியில் இருக்கும் சத்துகள் மற்றும் பிராய்லர் கோழி வளர்ப்பு முறைகள் போன்றவற்றை பற்றி பல செய்திகள் அவ்வப்போது வெளிவருகின்றன.  பிராய்லர் கோழி என்பது மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு கோழி இனம் என்பதால்,  அதனால், பெண்கள் இளம் வயதிலேயே பூப்பெய்திவிடுகின்றனர் என கூறப்படுகிறது,


ஒரு ஆண் பிராய்லர் சேவல் மூலம் பெண் பிராய்லர் கோழி இணவைதன் மூலம்  கிடைக்கும் முட்டைகளை செயற்கையாக கருத்தரிக்க இன்குபேட்டர் பயன் படுத்தி மிக குறைந்த நாளில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை ஆகும். இவை நல்ல சதைப் பற்றுடன் இருக்க, ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது. 


பிராய்லர் கோழியால் பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வருவது என்பது உண்மைக்கு புறம்பானது என்று பிராய்லர் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பல்லடம் பிராய்லர் கமிட்டி, பண்ணை கோழி விசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பு சார்பில் கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.


மேலும் படிக்க | பாசிப்பருப்பு ஒரு பொக்கிஷம்: பல உடல் பிரச்சனைகளின் ஒரே தீர்வு, விவரம் இதோ


இந்த கருத்தரங்கில் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளில் பிராய்லர் கோழியில் உள்ள ஊட்டச்சத்து தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 


மேலும், மருத்துவர்கள், உணவு நிபுணர்கள், சமையல் வல்லுனர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். தொடர்ந்து வெவ்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் கமிட்டி செயலாளர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:


- உடலுக்கு புரதம் கொடுக்கும் உணவாக பிராய்லர் கோழி உள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த தொழிலில் உள்ளனர்.


- மக்காச்சோளம் மற்றும் சோளம் விவசாயிகளும் இந்த தொழிலால்  பயன்பெற்று வருகின்றனர்.


- கோவையில் நடைபெற்ற கருத்தரங்கம் போல் பல நகரங்களிலும், கருத்தரங்கங்கள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.


மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்


- பிராய்லர் கோழி விலை குறைய வாய்ப்பில்லை. இடுபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இடுபொருட்கள் விலை குறைந்தால் தான் கோழி விலை குறையும்.


- பிராய்லர் கோழி குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம்.


- கோழிக்கு ஊசி போட்டு வளர்ப்பது என்பது தவறு. உயிர் காக்கும் தடுப்பூசி மட்டும் தான் செலுத்தப்படுகிறது.


- வளர்ச்சி ஊக்கிகள் கொடுப்பது சட்ட விரோதம், அப்படியாக மருந்துகள் எதுவும் கொடுப்பது அவசியம் இல்லை.


- முழுக்க அரசின் விதிமுறைவிதிமுறைகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகிறோம்.  


- பிராய்லர் கோழியால் பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வருவது உள்ளிட்ட பல பொய்யான காரணங்களை கூறுகின்றனர். 


இது முற்றிலும் தவறு என்று மருத்துவர்களே விளக்கம் கொடுத்துள்ளனர். 


இவ்வாறு அவர்கள் கூறினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR