காஷ்மீரின் அர்னியா பகுதியில் 14 அடி நீள சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படையினர்கண்டுபிடித்து உள்ளது. கடந்த 7 மாதங்களில் 2வது சுரங்கப்பாதை இது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சுரங்கப்பாதை பாகிஸ்தான் சார்பில் அமைக்கப்பட்டது என கூறப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த சுரங்கப்பாதை வழியாக இந்திய எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தவும், அதிக அளவில் பயங்கரவாதிகளை இந்த சுரங்கப்பாதை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்து, பண்டிகை காலத்தில் தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தான் இந்த சுரங்கப்பாதையை அமைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. 


இந்திய எல்லைக்குள் ஊடுருவலை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள எல்லைப்பாதுகாப்பு தடுப்புக்கு மிக அருகில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக நிறைவடையாத நிலையில் உள்ள இந்த சுரங்கப்பாதை 14 அடி நீளமும், 3 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்டதாகும். 


இந்த சுரங்கப்பாதையை பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்ததற்கு அடையாளமாக அங்கு ஏகே 47 ரக துப்பாக்கிகள், 4 வெடிகுண்டு பைகள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.