பொங்கள் பண்டிகையினை முன்னிட்டு ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு 3 இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில் 1400 காளைகள், 848 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளின் பாதுகாப்பிற்காக 10 டாக்டர்கள் அடங்கிய 13 மருத்துவக்குழுக்களும், 15 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பிற்காக 30 பேர் கொண்ட இந்திய - திபெத் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 


 



 


போட்டிகள் துவங்குவதற்கு முன் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்று, வீரர்கள் கலெக்டர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்.


ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கொடியசைத்து திறந்து வைத்தார். ஒரு மணிநேரத்திற்கு 75 பேர் என்ற வீதத்தில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்படுகிறார்கள்.