போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்கள் பாதிப்படையாமல் இருக்க சென்னையில் மட்டும் 2000 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, பனி நிரந்தரம், ஓய்வூதிய பணப்பலன்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.இதனால், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 


இந்நிலையில், சென்னை நகரில் மக்களின் அவதியை குறைக்க 2,000 தனியார் பேருந்துகளை இயக்கவும், சிறப்பு புறநகர் ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.