பஸ் ஸ்டிரைக் வாபஸ்: தமிழகத்தில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்!
கடந்த 8 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 8 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அரசு உடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தொழிற்சங்கங்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து அரசு பஸ்கள் இன்று அதிகாலை முதல் வழக்கம் போல் இயங்க துவங்கியது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இன்று காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டு உள்ளது.