இனி ரேஷன் பொருட்களை பெற ஓ.டி.பி. வழங்கி அதை சரிசெய்த பின்னரே பொருட்கள் வழங்கப்படும்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய காலகட்டத்தில் எல்லா உரிமைகளையும் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியாமாக்கி வந்தனர். தமிழகத்தில் சுமார் 2 கோடியே 13 லட்சத்து 183 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. தமிழகம் முழுக்க சுமார் 34 ஆயிரத்து 773 ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. 


தற்போது புழக்கத்திலுள்ள ஸ்மார்ட் கார்டில், 'க்யூ.ஆர்' கோடு என்ற மென்பொருள் பதிக்கப்பட்டுள்ளது. அதை ரேஷன் கடையிலுள்ள டிவைசில் பதிவு செய்து, அதன் பின்னர் பொருட்கள் வழங்கப்படுகிறது. வழங்கிய பொருள் பற்றிய விபரம் முழுவதும் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்-ஆக அனுப்பபடுகிறது. 


இந்த முறைக்கு பதலாக, புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உணவுப்பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது. இம்முறையில், பொருட்கள் தரும் முன்பே, ஸ்மார்ட் கார்டை ரேஷன் கடையிலுள்ள டிவைசில் பதிவு செய்தவுடன், மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்.


அந்த எஸ்.எம்.எஸ்-ல் ஓ.டி.பி., (ஒரு முறை கடவு எண்) அனுப்பப்பட்டிருக்கும். அந்த எண்ணை ரேஷன் கடைக்காரரிடம் தெரிவித்தால், அதை சரி பார்த்த பின்பே, பொருட்கள் வழங்கப்படும். இந்த முறை மூலம் ரேஷன் குடும்ப அட்டைதாரருக்கே பொருட்கள் போய்ச்சேரும். இந்த முறை மூலம் உணவுப்பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழகம் முழுக்க இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.


இந்த முறையை கோவை மாவட்டத்தில் சோதனை முறை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரயிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, மொபைல் எண்ணை, ஸ்மார்ட் கார்டில் இணைக்காத கார்டு தாரர்கள் இணைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த வசதி, மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பொருந்தாது என்று உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.


இதை தொடர்ந்து, உணவு பொருள் துறை அதிகாரிகள் கூறுகையில்...! 


'கோவையில் இத்திட்டத்தை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்காக எங்களிடம் தகவல்களை சென்னையிலிருந்து கேட்டுள்ளனர். 'நாங்களும் அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளோம். அரசு உத்தரவுக்குப்பின், இத்திட்டம் கோவையில் நடைமுறைப்படுத்தப்படும்' என்றனர்.