தமிழகத்தின் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.


இதனையடுத்து திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை திமுக, நாம் தமிழர் கட்சியனர் அறிவித்தனர். விரைவில் அதிமுக கட்சியினரும் அறிவிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.



இதற்கிடையில்., கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வரும் நிலையில்., தற்போது திருவாரூர் சட்டமன்ற தொகதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.