நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல்!
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி, கன்னியாகுமரி மாவட்டம் நாங்குநேரி தொகுதி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 21 இல் இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்; மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தல் மற்றும் அருணாச்சல பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், அசாம், குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, எம்.பி., மேகாலயா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள 64 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாகவும், இவை ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது" என அவர் அறிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளிலும் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி, செப்டம்பர் 23 ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள், செப்டம்பர் 30 ஆம் தேதி. வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்டோபர் 3 ஆம் தேதி கடைசி நாள். தேர்தல் வாக்குகள் 24 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.