அகில இந்திய அளவிலான சி.ஏ. தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் முதலிடம் பெற்றுள்ளார். இத்தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இதில் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்(வயது20) 800-க்கு 613 மார்க்குகள் அதாவது 76.63 சதவீதம் பெற்று முதலிடம் பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரது தந்தை ஓய்வுப்பெற்ற போக்குவரத்துத் துறை ஊழியர், தாயார் நுாலகராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த ஜான் பிரிட்டோ முதலிடம் பிடித்திருந்தார். இதையடுத்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழகம் சி.ஏ., தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் விஜயவாடாவைச் சேர்ந்த வெங்கட விஸ்வ உபேந்திரா என்ற மாணவர் இரண்டாமிடமும், குஜராத் மாணவர் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்