கலைஞர் பெண்கள் உரிமைத் தொகைக்கு இனி விண்ணப்பிக்க முடியுமா?
Magalir Urimai Thogai: கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை திட்டம் இன்று தொடங்கப்பட்ட நிலையில், அத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் இனி விண்ணப்பிக்க இயலுமா என பலருக்கும் சந்தேகம் உள்ளது. அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Magalir Urimai Thogai: மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 வழங்கும் 'கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை திட்டம்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கிவைக்கப்பட்டது. மேலும், பல்வேறு பகுதிகளில் பயனாளிக்கான பணம் எடுப்பதற்கான வங்கி டெபிட் கார்டுகளை அமைச்சர்கள் இன்று வழங்கினார்கள். பட்ஜெட்டில் ஆண்டுக்கு சுமார் ரூ. 12 ஆயிரம் கோடி வரை ஒதுக்கீடு செய்யும் அளவிற்கு இது மாபெரும் திட்டமாக இருக்கும்.
1 கோடிக்கும் மேலான பயனாளிகள்
இந்த திட்டத்தில் மொத்தம் 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், இந்த திட்டத்தில் சேர்வதற்கு பல்வேறு விதிமுறைகளும் இருந்தன. ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது, கார் வைத்திருக்கக் கூடாது, 5 ஏக்கர் நன்செய் அல்லது 10 ஏக்கர் புன்செய் நிலங்கள் ஆகியவைக்கு அதிகமாக வைத்திருக்கக் கூடாது போன்றவை அதில் அடக்கம். இதனை அடுத்து, விண்ணப்பங்களை முறையாக சரிபார்க்கப்பட்டு, 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
மாதாமாதம் 15ஆம் தேதி அன்று...
தொடர்ந்து, இவர்களுக்கு நேற்று முதல் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் அத்தனை பயனாளிகளின் கணக்கிலும் முழு தொகையும் செலுத்தப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி, இனி ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அனைத்து பயனாளிக்கும் ரூ. 1000 வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | குடும்பங்களின் வளர்ச்சியில் பெண்களுக்கான உரிமைத் தொகை
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள்
அரசு மற்றும் அரசு சார்ந்த பணியில் இருந்து விண்ணப்பித்த 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, ரூ. 2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் குடும்பங்கள், கார் மற்றும் கனரக வாகனங்கள் வைத்திருப்போர், ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின் நுகர்வு கொண்ட குடும்பங்களில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களும் விதிகள் படி நிராகரிக்கப்பட்டு உள்ளன.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிகாரிக்கப்பட்டதா என்பது குறித்த மெசேஜ் அவர்கள் விண்ணப்பத்தில் கொடுத்த நம்பருக்கு செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அந்த மெசேஜில் ஏன் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் இருக்கும் எனவும், அதனை தக்க பதில் அளித்து அவர்கள் மேல் முறையீடும் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி விண்ணப்பிக்க முடியுமா?
மேலும், இந்த திட்டத்தில் இணைய ஜூலை 24ஆம் தேதி முதல் ஆக. 4ஆம் தேதி வரை முதற்கட்ட முகாமும், ஆக. 5ஆம் தேதி முதல் ஆக. 14ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாமும் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஆக. 18, 19, 20 ஆகிய தேதிகளில் விடுபட்டவர்களும், விண்ணப்பிக்க தவறியவர்களும் விண்ணப்பிக்க சிறப்பு முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது இத்திட்டம் முழுவதுமாக செயல்பட தொடங்கிவிட்டது.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை: உங்கள் விண்ணப்பம் ரிஜெக்ட் ஆனதா? எப்படி தெரிந்துகொள்வது?
இதில், இன்னும் சிலர் விண்ணப்பிக்க தவறியதாக தெரிகிறது. அவர்கள் இத்திட்டத்தில் இணைய ஏதேனும் வழிகள் உள்ளதா, புதியதாக ரேஷன் கார்டு பெறும் குடும்பத் தலைவிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியுமா என்று கேள்விகள் எழுகின்றன. ஆனால், இதுவரை அப்படி இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் வரவில்லை. அரசு இது சார்ந்து அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே அடுத்த கட்டமாக இதில் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின்
இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய ஸ்டாலின்,"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்" என தெரிவித்திருந்தார். எனவே, இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும் என பலரும் நம்புகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X தளத்தில்,"நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்தி திராவிட மாடலில் தமிழ்நாட்டைத் தலைநிமிர்த்தி வருகிறோம். காலை உணவுத் திட்டம் மாணவர்களின் வருகையை உயர்த்தி, கற்றல் திறனை மேம்படுத்துகிறது. இப்போது கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தால் உழைக்கும் மகளிரின் சிரமத்தைச் சற்று போக்கியிருக்கிறோம். தாயாகக் கருணையையும் - மனைவியாக உறுதுணையையும் - மகளாகப் பேரன்பையும் பொழியும் மகளிர்க்குத் 'தாயுமானவராகத்' தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பொருளாதார உரிமையும் பெண்களின் விடுதலையும்-கலைஞர் மகளிர் உரிமைத்தொகை செய்த மாற்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ