ஆர்கேநகர் இடைத்தேர்தல் ரத்து: டிடிவி தினகரன் கண்டனம்!!
ஆர்கேநகர் இடைத்தேர்தலை ரத்து செயததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆர்கேநகரில் ஏப்ரல் 12-ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது.
இந்த தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, டெல்லியில் நடந்த ஆலோசனைக்கு பிறகு ஆர்கேநகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் ஆர்கேநகர் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது ஜனநாயகப்படுகொலை என்று அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக அம்மா அணி தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை அறிந்த சில துரோகிகளின் சூழச்சி தான் இது என்றும் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நான் வெற்றி பெறுவேன் என்று தெரிந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பணியில் ஈடுபட்ட தொண்டர்களின் உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டதாகவும் தினகரன் வருத்தம் தெரிவித்தார். மேலும் தேர்தலை ரத்து செய்திருப்பது ஜனநாயகப்படுகொலை என்றும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.