திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டசபையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தடியடி நடத்துவதற்கு யார் தூண்டி விட்டார்கள் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த சபாநாயகர் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானம் பற்றி தற்போதைய கூட்டத் தொடரில் விவாதித்து நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.