தமிழகத்திற்கு சாராயமே வேண்டாம் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனையை அறிவிக்க வேண்டும் என வேலூரில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கோபிநாத் பேட்டி அழைத்துள்ளார். வேலூரில் உள்ள ஏலகிரி அரங்கில் இந்து முன்னேற்ற கழக வேலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டமானது, மாநில பொதுசெயலாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் கோட்டத்தலைவர் சக்திவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கோபிநாத் கலந்துகொண்டு பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும் - இளங்கோவன்!


பிறகு இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கோபிநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை கோயம்பேட்டில் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற அனுமதிக்கு பின்னரும் மசூதியை இடிக்க அரசு தயங்குகிறது. ஆனால் தமிழக அரசு இந்துகோவில்களை இடிப்பதை கைவிட வேண்டும். கள்ளச்சாராயம் பிரச்சணை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு முயற்சி எடுப்பது போதாது கள்ளச்சாராயத்தை ஒழிக்க தனி பிரிவை அரசு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் மது விலக்கு சரியாக செயல்படவில்லை, கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும். வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.


இங்கு தோல் தொழிற்சாலைகளில் அடிமட்ட ஊதியம் மட்டுமே வழங்கபடுகிறது, உடனடியாக தொழிலாளர் நலதுறை தமிழக அரசு சராசரியாக சம்பளம் வழங்க வேண்டும். அனுமதியில்லாமல் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும், இல்லையென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்வோம். சட்டமன்றத்தில் அமைச்சர் பேசியது தவறு, சாராயம் கிக் உள்ளதா இல்லையான என பேசுவது தவறு, கள்ளச்சாராயம் 10 லட்சம் அபராதம் ஆயுள் தண்டனை என்பதை ஏற்றுகொள்கிறோம். ஆனால் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என கூறினார்.


பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்


இவ்வளவு ஆண்டுகள் தூங்கிவிட்டு இப்போதுதான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்தது போல இப்போதுதான் முதல்முறையாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது போல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். கடந்தாண்டு 22 உயிரை இழந்து உள்ளோம், செங்கல்பட்டு மரக்காணம் விழுப்புரத்தில் இப்போதும் கள்ளச்சாராயம் விற்பனை ஆகிறது. இது உண்மையிலேயே கண்துடைப்பு நாடகம் தான். வழக்கு பதிவு செய்வதற்கு முடியாது என்கிறார்கள். கள்ளக்குறிச்சியில் பெண்ணாகுரத்தில் நேரடியாக சென்று அனைவரையும் சந்தித்துதான் சொல்கிறேன். மொத்தமாக ஆளுங்கட்சியின் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. எனவே முழு பொறுப்பு ஏற்று அமைச்சர் முத்துசாமி அவர் பதவி விலக வேண்டும், அப்போதுதான் இதை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியும்.


மேலும் இதற்கு முழு பொறுப்பை அரசுதான் ஏற்க வேண்டும். இனி ஒரு மரணமும் நிகழக் கூடாது, இது மிகவும் கண்டனத்திற்குரியது என்பதை நான் கூறிக் கொள்கிறேன். திமுக அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் பேசியதைத்தான் நான் சொல்கிறேன். கொஞ்சம் கூட ஒரு மூத்த அமைச்சர் என்று இல்லாமல் சரக்கில் கிக் இல்லை என்று கேவலமான ஒரு ஸ்டேட்மென்ட்டை சட்டசபையில் கொடுக்கிறார். எந்த அளவிற்கு இது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் தலைகுனிவு? பிறகு ஏன் அது போன்ற பொருளை விற்கிறீர்கள்? அப்போது இந்த அரசு தரம் இல்லாதது என்று தெரிகிறதா? அதிக விலைக்கு விற்கிறீர்கள் அதனால் அதை வாங்க முடியவில்லை என்று கள்ளச்சாராயம் வாங்க சொல்கிறார்கள் என்று அவரே சொல்கிறார். இந்த ஒரு சான்று போதும் இதுவே அரசை டிஸ்மி செய்வதற்கு சான்றாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | 101 பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்கள்... கூடவே மாதம் ரூ.5000 - ரோட்டரி கிளப் அசத்தல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ