ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் கடந்த வாரம் குன்னூர் செல்லும்போது ராணுவ ஹெலிக்காப்டர் விபத்தில் சிக்கினர். இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங்கைத் தவிர யாரும் உயிர் பிழைக்கவில்லை. பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். 85 விழுக்காடு தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குருப் கேப்டன் வருண் சிங், பெங்களுருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அவசர மத்திய அமைச்சரவை கூட்டம்!


அவரது உடல்நிலை குறித்த தகவலை வெளியிட்ட விமானப்படை அதிகாரிகள், வருண்சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும், உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர்கள், நிபுணத்துவம் பெற்ற மருத்துவக்குழுவினர் தொடர்ந்து அவரது உடல்நிலையை கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


கேப்டன் வருண்சிங் இந்திய விமானப்படையில் தலைச்சிறந்த வீரராக இருப்பவர். இதேபோல், ஒருமுறை ராணுவ ஹெலிக்காப்டர் விபத்தில் சிக்க இருந்தபோது, சாதுர்யமாக செயல்பட்டு ஹெலிக்காப்டரை பத்திரமாக தரையிறக்கிய அணுபவம் அவருக்கு உண்டு. மற்றொருமுறை விபத்தில் சிக்கியபோதும், பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். இந்த முறை அதிபயங்கரமான விபத்தை எதிர்கொண்டு சிகிச்சை பெற்று வரும் அவர், விரைவில் நலம் பெற்று வர வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்கிடையே, அவருக்கு உயரிய சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் செய்து கொடுத்து வருகிறது.


ALSO READ | ஜனநாயகத்தை கொல்வது துரதிர்ஷ்டமானது - மோடி அரசை கடுமையாக சாடிய ராகுல் காந்தி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR