குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அவசர மத்திய அமைச்சரவை கூட்டம்!

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து காரணமாக அவசர மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 8, 2021, 02:25 PM IST
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து:  அவசர மத்திய அமைச்சரவை கூட்டம்! title=

குன்னூர் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பல உயரதிகாரிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.   குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.  இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  மீதமுள்ளவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.  சிலரின் உடல், விபத்து நிகழ்ந்த இடத்தின் மலைப் பள்ளத்தாக்குகளில் கிடப்பதாக கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணித்ததை உறுதி செய்தது இந்திய விமானப்படை.  இந்த விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ராணுவம் உத்தரவுவிட்டுள்ளது.  மேலும் அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் விபத்து குறித்தும் அது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விசாரணையின் நிலவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்.  விபத்து நடைபெற்ற இடத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; பயணித்தவர்கள் விவரம்

1.பிபின் ராவத்
2.மதுலிகா ராவத் 
3.எல்.எஸ்.லிடர் 
4.ஹர்ஜிந்தர் சிங்
5.ஜிதேந்திர குமார்
6.விவேக் குமார்
7.சாய் தேஜா
8.ஹாவ் சாட்பால்
9.குருசேவாக் சிங்

ALSO | Breaking News: நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து: நான்கு பேர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News