சென்னை சில்க்ஸ் மீது வழக்கு பதிவு: டிராபிக் ராமசாமி
சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
7 மாடி கொண்ட சென்னை சில்க்ஸ் கட்டிடமும், அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதம் அடைந்தன.
சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து தி.நகரில் விதிமீறல் கட்டடம் தொடர்பான வழக்கை விசாரிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார்.
சென்னை சில்க்ஸ் கட்டட விதிமீறலுக்குக் காரணமாக அதிகாரிகள்மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், தி.நகரில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக 2006-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, தி.நகர் கட்டட விதிமுறை மீறல் தொடர்பான வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என்று டிராபிக் ராமசாமியின் முறையீட்டை ஏற்று நீதிபதிகள் அறிவித்தனர்.