பாடல்களுக்கான ராயல்டி தொகையை முறையாக தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இளையராஜா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட்ரந்துள்ளனர். "ராயல்டி தொகை முழுவதும் தனக்கே கிடைக்க வேண்டுமென அவர் உரிமைக் கொண்டாடுவதாகவும், இதனால் தயாரிப்பாளர்களுக்கு வருவாய் கிடைப்பதில்லை எனவும், ரூ.200 கோடி வரை தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படாமல் போயிருக்கிறது" எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 


மேலும், கச்சேரிகளில் இளையராஜாவுக்கு வரும் தொகையில் 50% தயயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இளையராஜா பரிந்துரையின்படி பல தயாரிப்பாளர்கள் தங்களது ஆடியோ உரிமையை எக்கோ கம்பெனிக்கு வழங்கினர். அதில் வரும் ராயல்டி 50 சதவிகித பங்கு இதுவரை எந்த தயாரிப்பாளர்களுக்கும் முறையாக வந்ததில்லை. இனி வரும் காலங்களில், பாடல்களின் மூலம் வரும் வருவாய் 25 லட்சம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருமானம் தயாரிப் பாளர்களுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். 


பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களை சாருமே தவிர, சம்பளம் வாங்கி இசையமைத்த இளையராஜாவுக்கு சேராது. இதுவரை சுமார் 200 கோடிக்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய ராயல்டி பணம் ஏமாற்றப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.