வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும், தேசத்திற்கு எதிராக பேசியதாகவும் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 12-ஆம் தேதி கோவையில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக திரைப்பட இயக்குநர் அமீர் மீது கோவை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இயக்குநர் அமீருக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.



அப்போது அவர் தேசத்திற்கு விரோதமாகவும், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் நாராயணன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் இந்த புகாரில் "பாரதிராஜா தமிழகத்தில் மாவோயிஸ்ட் இயக்கம் மற்றும் நக்சலைட் இயக்கங்கள் சுவடுகள் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று தமிழக அரசை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.


வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக ஏற்கனவே வடபழனி காவல் நிலையத்தில் இயக்குநர் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், சர்சைக்குரிய பேச்சு (IPC 153), பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியது (505/1B) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.