சென்னை: ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக 36 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெறப்படும் என தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது அவர்:-


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை : விசாரணை ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு.


வன்முறையில் பாதிக்கப்பட்ட நடுகுப்பத்தில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் நவீன மீன் சந்தை - முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக 36 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெறப்படும். மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.


போராட்டத்தின்போது தீ வைத்ததாக புகாரில் சிக்கிய காவலர்கள் மீதும் கடும் நடவடிககை எடுக்கப்படும். 


இவ்வாறு அவர் பேசினார்.