தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள டொம்புச்சேரி நகரில் 8 தலித் குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். அரியலூர் மாணவி மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக செய்தி பரபரப்பாகிக் கொண்டிருக்கும் சூழலில் போடியில் நடைபெற்ற இந்த மதமாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலித்தாக இருப்பதால் கடுமையான ஜாதிய அடக்குமுறைக்கு ஆளாவதாகவும் அதில் இருந்து விடுபடவே மதம் மாறியிருப்பதாகவும் கூறுகிறார் முஸ்தபாவாக மாறியிருக்கும் நாகராஜ். ஆறு மாதத்துக்கு ஒருமுறை தாக்குதலுக்கு ஆளாவதாகவும் உடமைகள் நாசம் செய்யப்படுவதாகவும் முஸ்தபா தெரிவித்துள்ளார்.


இன்றைய வளர்ந்த நாகரிக காலத்தில் கூட உயர்ஜாதியினருக்கு முடி திருத்தம் செய்பவர்கள் தங்களுக்கு செய்ய மாட்டார்கள் என்றும் இதற்காக அடுத்த கிராமங்களுக்கு சென்று முடிதிருத்தம் செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த ஜாதிய இழிவில் இருந்து விலகவே மதம் மாறியிருப்பதாக கூறுகிறார் முகமது அலி ஜின்னா.


ALSO READ | வார்டன் தொல்லையா? மதமாற்றமா? லாவண்யாவின் புதிய வீடியோ


அரியலூரில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவர் பள்ளியில் மதமாற்றத்துக்கு நிர்பந்திக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றியுள்ளது. தமிழக அரசும் காவல்துறையும் மாணவி தற்கொலையில் மதமாற்றம் இல்லை என்று கூறிவந்தாலும் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்த மதமாற்ற நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், ஜாதிய அராஜகம் என்ற குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். உடனடியாக டொம்புச்சேரி நகர மக்களிடையே பேசி இந்த பிரச்சனையை தீர்க்க இருப்பதாகவும் கூறியுள்ளார். 


ALSO READ | திமுக பிரமுகர் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட இருவர் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR