ஈ.வெ.ரா.வின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சமூக நீதி நாளாகக் கடைபிடிக்கப்படும் நிலையில், சிலர் ஜாதிய உறுதிமொழி எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், " பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும்" என, சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  இதன்படி இன்று ஈ.வெ.ரா.வின் 143ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சமூக நீதி நாள் உறுதியேற்பை எடுத்துக் கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை அண்ணாசாலையில் இருந்து தலைமைச்செயலகம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் சமூக நீதி நாள் உறுதிமொழியை முதலமைச்சர் ஸ்டாலின் வாசித்தார். அங்கிருந்த அரசு ஊழியர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  இதேபோல், தமிழகத்திலுள்ள தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளான செப்.17-ம் தேதி அன்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.  இந்நிலையில், சிறுவர்கள் ஜாதி பிரமாணம் எடுத்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்ட சிறுவர்கள் சிலர் பிராமண ஜாதி தொடர்பான பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி நடைபெற்றதாக தெரிகிறது. .  தமிழ்நாடு பிராமணர் சங்கத்தை சேர்ந்த சிலர் கலந்து கொண்ட இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் பிரமிட் நடராஜனும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் என்.நாராயணன் தலைமை வகித்துள்ளார்.  ஜாதிகள் கடந்த சமூகத்தை கட்டமைக்க பலரும் முயன்று வரும் இந்த காலகட்டத்தில் பதின் சிறுவர்களிடையே ஜாதி உணர்வை தூண்டுவதாக அமைந்துள்ள இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


 



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR