தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் சேவாபவன் அலுவலகத்தில் நடைபெற்றது. 


காலை 11 மணிக்குத் தொடங்கிய கூட்டமானது பிற்பகல் 3 மணிக்கு முடிவுற்றது. கூட்டத்திற்கு பின்னர், ஜூலை மாதத்திற்கென தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 30 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுமையாக ஏற்காத கர்நாடகாவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 


முதல் கூட்டத்திலேயே காவிரி நீரை திறந்துவிட ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்!