கர்நாடக அணைகளில் நீர் இருப்பு இல்லாததால் தமிழகத்துக்குத் தற்போது திறந்துவிட வேண்டிய நீரை வரும் டிசம்பரில் திறந்துவிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடகாவின் புதிய சீராய்வு மனுவை நிராகரிக்க வேண்டும் எனத் தமிழக அரசும் அவசரமாகப் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.


இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக அரசின் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.



முன்னர் நடந்தவை:-


தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தர விட்டதை நிராகரிக்கும் வகையில், கடந்த 23-ம் தேதி கர்நாடகச் சட்டப்பேரவையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது எனச் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதையடுத்து தமிழக அரசு கடந்த 24-ம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதில்:-  தமிழகத்தில் தற்போது திறக்கப்பட்ட நீர் போதுமானதாக இல்லை. எனவே நிலுவையில் உள்ள 50.052 டிஎம்சி நீரைத் திறக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


காவிரி மேற்பார்வைக் குழுவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில்:- கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லாததால் தமிழகத் துக்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட முடியாது. எனவே காவிரி மேற்பார்வை குழுவின் முடிவை நிராகரிக்க வேண்டும் எனவும், மேலும் தமிழகத்துக்குத் தற்போது திறந்து விடப்பட வேண்டிய நீரை வரும் டிசம்பர் மாதத்தில் சேர்த்துத் திறந்துவிட அனுமதிக்க வேண்டும். அந்த மனுவில் கோரி இருந்தது.