தமிழகத்திற்கு தேவையான காவேரி நீரை திறக்க வேண்டும்: TN Govt
தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடகா உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
புதுடெல்லி: தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடகா உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும் என விரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கிறது. மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை பொருட்படுத்தாமல் புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்ககூடாது என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல திமுக, பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக இடையே ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில், இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் தொடங்கியது.
அப்பொழுது தமிழக அரசு சார்பில், காவேரி நீரை முறைப்படுத்தும் கூட்டத்தை இனி பெங்களூரில் நடத்த வேண்டும்.மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால், இந்த வருடமும் குறுவை சாகுபடிக்கு நீர் திறந்து விட வில்லை. இப்படியே சென்றால் விவசாயிகள் நிலைமை என்னவாகும்? ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 91.29 டிஎம்சி நீரையும், ஜூலை மாதத்திற்க்கான 31.24 டிஎம்சி நீரையும் கர்நாடகா உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும் போன்ற வாதங்கள் வைக்கப்பட்டு உள்ளது.