சம்பா சாகுபடிக்கு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கட்சி ஆதரவு பெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போராட்டத்துக்கு தி.மு.க, த.மாகா., ம.தி.மு.க. கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. வணிகர் சங்க பேரவையும் தார்மீக   ஆதரவு அளித்து இருந்தது.


அதன் படி இன்று போராட்டம் நடைப்பெற்றது. மேலும் சில பகுதிகளில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 


இந்த 6 மாவட்டங்களிலும் சுமார் 200-க்கும் மேற் பட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். 


இதற்கிடையே கர்டநாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாகவும், அதனால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்த ராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.