புதுடெல்லி:  தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றதில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. 


காவிரி நதிநீர் வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மறு உத்தரவு வரும் வரை தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 2000 கன அடிநீர் திறந்து விட வேண்டும் என்றது. மேலும் இவ்வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 7-ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. 


பிப்ரவரி 7-ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி என ஒவ்வொரு தரப்பிற்கும் பதிலளிக்க 3 வார கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.


முன்னதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்தே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் தமிழகத்தில் 60 சதவீதம் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தொடர்ந்து காவிரியில் விநாடிக்கு 2000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என வாதத்தை முன்வைத்தார். 


தமிழக அரசின் இந்த வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட், மறு உத்தரவு வரும் வரை கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.