காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி நீர் பிரச்சனை, தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக நீடித்து வருகிறது.


கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அதில் 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.


அதில் 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.


எனினும், காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன.


இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட வாதம் தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி தொடங்கியது.


செப்டம்பர் 20-ம் தேதி வாதங்கள் முடிவடைந்த பின்னர், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில், விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் கழித்து காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம்  இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி இரு மாநிலங்களிலும் விவசாயிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.