கள்ளக்குறிச்சி மாணவி வீடியோக்களை வலைதளத்தில் பதிவிட்டால் நடவடிக்கை - சிபிசிஐடி எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக எந்தவிதமான பதிவுகளை வெளியிட்டாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கன்னியமூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்தது தொடர்பாக அங்கு பெரும் கலவரம் வெடித்து பதற்றமான சூழல் நிலவியது.
அதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் களமிறக்கப்பட்டு அங்கு நீடித்து வந்த பதட்டமான சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர் மேலும் அந்தக் கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பியவர்களை போலீசார் கைது செய்து தற்போது வரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | Detox: உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற ‘சில’ எளிய வழிகள்
மேலும் இவ்வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன்விசாரணை நடைபெற்று வருவதாகவும், இவ்வழக்கின் புலன் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருவதாகவும் இந்த வழக்கு குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் சிலர் தங்களது சொந்த கருத்துக்களை பதிவிட்டு வருவதால் இது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் புலன்விசாரணையை பாதிக்கும் வகையில் உள்ளதாக சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய சூழ்நிலையில், புலன்விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாமென்றும் சிபிசிஐடி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கும், நியாயமான புலன்விசாரணை மேற்கொள்ளவும் அனைவரும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன்விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அவர்களுடைய வலைதள கணக்குகள் மற்றும் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவ்வழக்கு தொடர்பாக யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் உயர் அதிகாரின் அலைப்பேசி எண் 9003848126 க்கு நேரடியாக பகிரும்படி கேட்டு கொண்டுள்ளது.
மேலும் படிக்க | Type 3 diabetes: நீரிழிவு நோயின் மூன்றாம் வகை கண்டறியப்பட்டது! WHO அதிர்ச்சி தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ