பணத்தை பதுக்கி வைத்திருந்ததால் சென்னையில் சேகர் ரெட்டியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேகர் ரெட்டி என்பவர் அரசு துறைகளின் முக்கிய ஒப்பந்தங்களைப் பெற்று பணிகளை மேற்கொண்டு வந்தார். அவரது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், 132 கோடி ரூபாய் மற்றும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறி முதல் செய்யப்பட்டது. அதில், 35 கோடி ரூபாய்க்கு, புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால், சி.பி.ஐ., அமைப்பு விசாரணையில் இறங்கியது. அவர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


சிபிஐ அதிகாரிகள் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து சேகர் ரெட்டியும், அவரதுஅவரது நண்பரும் சீனிவாசலுவும் கைது செய்யப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் ஜனவரி 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. 


இந்நிலையில் ஜாமின் கேட்டு சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.