திருச்சி விமான நிலையத்தில் 3வது நாளாக இன்றும் சிபிஐ அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தங்கக் கடத்தல் காரர்களுக்கு உதவியதாக 19 பேர் நேற்று வரை கைது செய்யப்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 3 மாதங்களாக பயணிகள் சிலரிடம் கடத்தல் தங்கங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். கடந்த 25-ம் தேதி மலேசியாவில் இருந்து திருச்சி வந்த தனியார் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.3 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை சென்னையில் இருந்து வந்திருந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


இந்நிலையில் நேற்று மாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தது. அதில் பயணித்த 20 பேர் சுங்க சோதனை முடிந்து வெளியே வந்தனர். அப்போது அங்கு திடீர் என வந்த சிபிஐ அதிகாரிகள் 11 பேர் அவர்களை சூழ்ந்து கொண்டு, மீண்டும் விமான நிலையத்தின் உள்ளே அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். தற்போது வரை இந்த சம்பவத்தில் 3 சுங்கதுறை அதிகாரிகள் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


மேலும் திருச்சி விமான நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 6 சுங்கத்துறை அதிகாரிகள் உட்பட 19 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளது. இந்நிலையில் சோதனையானது 3வது நாளாக சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.