காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீடுகள் மற்றும் அலுவலங்களில் என பல்வேறு இடங்களில்  சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பிரிவு 120பி பிசி சட்டத்தின் கீழ் முன்னாள் சுற்றுச்சூழல் அமைசர் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.


இவர் காங்கிரஸ் ஆட்சியின் போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில்மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.